← பட்டியல்

உரிமையாளர் முன்னோட்டம் · உள்ளடக்கம் பரிசீலனையில் உள்ளது

வரிசை 424 / 600 · 25 வரும் எண்ணிக்கை

بَغَىٰ

வேர்ச்சொல்: بغي

சொற்பொருள்கள் பரிசீலனையில் உள்ளன. மனப்பாடப் பயிற்சி இன்னும் திறக்கப்படவில்லை.

வசன எடுத்துக்காட்டு · 4:34

ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖ وَبِمَآ أَنفَقُواْ مِنۡ أَمۡوَٰلِهِمۡۚ فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٞ لِّلۡغَيۡبِ بِمَا حَفِظَ ٱللَّهُۚ وَٱلَّٰتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهۡجُرُوهُنَّ فِي ٱلۡمَضَاجِعِ وَٱضۡرِبُوهُنَّۖ فَإِنۡ أَطَعۡنَكُمۡ فَلَا تَبۡغُواْ عَلَيۡهِنَّ سَبِيلًاۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيّٗا كَبِيرٗا

வசனத்தின் பொருள்

இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.

அவர்களில் சிலரை (-பெண்களை) விட சிலரை (-ஆண்களை) அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பார்கள். ஆகவே, நல்ல பெண்கள் (அல்லாஹ்விற்கும்; பிறகு, கணவனுக்கும்) பணிந்து நடப்பார்கள்; (கணவன்) மறைவில் இருக்கும்போது (பெண்) எதை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறினானோ அதை (-கணவனின் செல்வத்தையும் தமது கற்பையும்) பாதுகாப்பார்கள். இன்னும், (பெண்களில்) எவர்கள் (உங்கள் கட்டளைக்கு) மாறுசெய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இன்னும், (அவர்கள் திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்தி வையுங்கள். இன்னும், (அதிலும் அவர்கள் திருந்தாவிட்டால்) அவர்களை (காயமேற்படாதவாறு) அடியுங்கள். ஆக, அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் மீது (குற்றம் சுமத்த) ஏதேனும் ஒரு வழியைத் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்.

ஆதாரம்: QuranEnc.com · Tamil Translation - Omar Sharif

வசனச் சூழலைக் கேளுங்கள்

வசன எடுத்துக்காட்டு →
600 சொற்களில் ஒரே வேருடைய சொற்கள்

சொல் எண்ணிக்கை வசனப் புரிதலின் அளவு அல்ல.

ஆதாரம்: Quranic Arabic Corpus · © 2011 Kais Dukes