இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.
இன்னும் (நபியே!) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றிலிருந்து (ஏதேனும்) ஒரு கனி உணவாக அவர்களுக்கு வழங்கப்படும்போதெல்லாம் இது, முன்னர் நமக்கு வழங்கப்பட்டதுதான் என்று அவர்கள் கூறுவார்கள். இன்னும் (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக்கூடியதாகவே அது (-கனி) அவர்களிடம் கொண்டு வரப்படும். இன்னும், தூய்மையான மனைவிகளும் அவற்றில் அவர்களுக்கு உண்டு. இன்னும், அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”